வியாழன், 25 பிப்ரவரி, 2010

மருத்துவருக்கு ஒரு மருத்துவ அட்வைஸ்

என் மகன் வீரராகவன் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது வகுப்பில் பெஞ்ச் ஒன்று அவன் கால் மீது விழுந்து எலும்பு முறிந்தது. நான் அவனை என்  முன்னாள் மாணவர் மருத்துவர். தியாகராஜனிடம் காட்டினேன்.
அவர் அவனுக்கு `தாமஸ் கட்டு` போட்டு ஒரே மாதத்தில் குணப்படுத்தி வி்ட்டார். 
மற்றொரு சமயம் எனக்கு 70 வயதான சமயம் பெரிய கடைவீதியில் நடந்து செல்லும்போது, மாட்டுச் சாணத்தின் மீது கால் வைத்ததால் வழுக்கி விழுந்தேன். வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. 22 நாட்களில் என்னை குணப்படுத்தி விட்டார்.
இத்தகைய ‘தாமஸ் கட்டு’ சிகிச்சை அப்பொழுதே மிக அரிதாக செய்யப்பட்டது. தற்போது மருத்துவர்களுக்கு எக்ஸ்ரே , ஸ்கேன் ரிப்போர்ட் இல்லாமல் சிகிச்சை செய்வதில்லை. செய்தாலும் ஸ்டீல் பிளேட்  வைத்து சீக்கிரம் முடித்து விடுகிறார்கள். செலவும் அதிகம். ( நான் மருத்துவம் பயின்றதில்லை என்பதால் அதிகம் விமர்சனம் செய்யவில்லை.) 
மருத்துவரின் மனைவி ஒரு பி.ஏ பட்டதாரி. ஆனால் அவரால் ஆங்கிலத்தில் பேச முடியவில்லை. என்னை அழைத்து ஆங்கிலம் பேசக் கற்றுக் கொடுக்கச் சொன்னார். நான் ஓராண்டு சொல்லிக் கொடுத்தேன்.
மருத்துவருக்கு ஒரு அட்வைஸ்
மருத்துவர் தியாகராஜனின் உடல் பருமனாக இருக்கும். வயிறு பெரியதாக இருக்கும். நான் அவரிடம், “டாக்டர், உங்கள் வயிறு பெரியதாக இருப்பது நல்லதல்ல. உங்கள் மனைவி மீனாட்சியின் உடலைப் போல மெலிந்து இருப்பது நல்லது. நான் டாக்டர் இல்லை. ஆனால் ஒரு சோவியத் நாட்டு விஞ்ஞானி சொல்லியிருக்கிறார்.
The secrets of Long Life -
  1. Getting Married, having children.
  2. Living in high places.
  3. Eating Moderately
  4. Drinking well - water
  5. Eating fruits and nuts
  6. Breathing pure air
  7. Keeping body slim.
Dr.Mislimov said, " The man who lives to a ripe old age is the one to whom life is a joy.
  1. Who does not envy others. 
  2. Who does not harbour malice
  3. Who sings a lot and cries a little
  4. Who gets up at dawn
  5. Who lives to work
  6. Who knows how to have a good time
  7. Who walks a long distance daily
  8. Who is always active
இவ்வாறு நான் சொன்னபோது டாக்டர் சிரித்தார். 
மூன்று ஆண்டுகளுக்கு பின்பு ஒரு நாள் நான் அவரைப் பார்க்கச் சென்றபோது, அவர் சோகமாக இருந்தார். முகம் கறுத்திருந்தது. “டாக்டர், உங்கள் உடம்புக்கு என்ன?” என்று கேட்டேன்.
”சார், என் நுரையீரல்களில் ஒன்று கெட்டுவிட்டது. நான் அமெரிக்காவுக்கு செல்ல வேண்டும். விசாவுக்காக காத்திருக்கிறேன்” என்றார். நான் வருத்தப் பட்டேன். அவரை வாழ்த்தினேன்.
ஒரு கோடி ரூபாய் செலவாகும் என்று சொன்னார்கள். டாக்டர் உயிருடன் திரும்பவில்லை. உடலை மட்டும் விமானத்தில் கொண்டு வந்தார்கள்.
(இரைப்பை பெரிதானால், இருதய நோய், நுரையீரல் நோய் வரும் வாய்ப்பு அதிகம். - 50, 60 வயதுக்கு மேல் உணவுக் கட்டுப்பாடு அவசியம். நான் உணவில் எச்சரிக்கையாக இருந்து வருகின்றேன்.)
மேலே குறிப்பிட்டுள்ள ஆங்கில வாக்கியங்களின் பொருள்.
நீண்ட வாழ்க்கையின் இரகசியங்கள்.
1. திருமணம் செய்து கொண்டு பிள்ளைகள் பெறுவது.
2. உயர்ந்த இடங்களில் வசிப்பது.
3. உணவு கட்டுப்பாடு
4. கிணற்று நீரைப் பருகுவது.
5. பழங்களை உண்பது
6. சுத்தமான காற்றை சுவாசிப்பது
7. உடலை மெலிதாக வைத்துக் கொள்வது.
மருத்துவர் மிஸ்லிமோவ் கூறினார், “ நீண்ட நாள் வாழ்பவனுக்கே வாழ்க்கை ஒரு இன்பமே”
1. பிறர் மேல் பொறாமை கொள்ளாதே.
2. பிறருக்கு தீங்கினை எண்ணாதே.
3. நிறைவாய் பாடு, குறைவாய் அழு
4. அதிகாலை எழு
5. வேலையை விரும்பு
6. நேரத்தை திட்டமிட்டு செலவழி
7. நீண்ட தூரம் நட
8. ஊக்கத்துடன் செயல்படு.